'பாகுபலி'க்கு சவால் விடுக்கும் மல்டி ஸ்டார் படத்தின் டீசர்.. ஒரே படத்தில் மோகன்லால், சரத்குமார், அக்சய்குமார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் உருவான ’கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் ’பாகுபலி’ படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, மோகன் லால், பிரபாஸ், சரத்குமார் ஆகிய தென்னிந்திய பிரபல நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், என மல்டி ஸ்டார் படமாக ’கண்ணப்பா’ படம் உருவாகி உள்ள நிலையில் இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்த் மற்றும் காஜல் அகர்வால் ஆகிய இரண்டு நாயகிகளும் நடித்துள்ளனர்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் ஸ்டீபன் இசையில் உருவாகிய இந்த படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேல் உள்ள டீசர் பிரமாண்டமாக உள்ளது. சிவபெருமானை மையமாக வைக்கும் காட்சிகள், பிரம்மாண்டமான போர் காட்சிகள், அதிரடி ஆக்சன் காட்சிகள், மல்டி ஸ்டார்களின் மேக்கப் என பெரும் பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.
இந்த படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் மோகன் பாபு பேசியபோது ’இந்த படத்தில் காளஹஸ்தியின் முக்கியத்துவம் குறித்து காட்டியுள்ளோம் என்றும் பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக உருவாகி உள்ளது என்றும் இந்தியாவின் 4 மூலைகளில் இருந்தும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தை தயாரித்ததை நான் பெருமை கருதுகிறேன் என்றும் இந்த படத்தில் உள்ள அனைத்து கலைஞர்களும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
’இந்த படத்தை தொடங்குவதற்கு சிவபெருமானே அனுமதி அளித்ததால் தான் இதில் நடித்தேன் என்றும் ’கண்ணப்பா’ ஆசிர்வாதம் தனக்கு முழுமையாக இருப்பதாக நம்புவதாகவும் இதை ஒரு புராண கதையாக மட்டும் பார்க்காமல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு போர்வீரர் படமாக பார்க்க வேண்டும்’ என்றும் நாயகன் விஷ்ணு மஞ்சு கூறியுள்ளார்.
மொத்தத்தில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ’பாகுபலி’ ’காந்தாரா’ அளவுக்கு வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com