முல்லை பெரியாறு அணை: கேரள அரசுக்கு இயற்கை கற்றுக்கொடுத்த பாடம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையே முல்லை பெரியாறு அணையின் பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக இருப்பது தெரிந்ததே. முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே அந்த அணையை அகற்ற வேண்டும் என்றும் கேரள அரசியல்வாதிகளும் ஊடகங்களும் திட்டமிட்டு செய்தியை பரப்பி வருகின்றன. ஏனெனில் முல்லை பெரியாறு அணை இல்லையென்றால் அதன் கீழே இருக்கும் இடுக்கி அணையில் அதிக தண்ணீர் இருக்கும். முல்லை பெரியாறு அணையால் கேரளாவிற்கு பெரிய அளவு பயன் இல்லை. இதில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயனபடுகிறது.
எனவேதான் முல்லை பெரியாறு அணையை தகர்த்துவிட்டால் கேரளாவிற்கு பயன் தரும் இடுக்கி அணையில் தண்ணீரை சேமிக்கலாம் என்ற நோக்கத்தில் கேரள அரசு முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அந்த அணையை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது.
இதனை கடுமையாக எதிர்த்த தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடுத்தது. ஜெயலலிதா ஆட்சியில் இந்த அணை வலுவாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் இந்த அணையை இடிக்க கூடாது என்றும், 146 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்றும் சுப்ரீம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பின்னர் நிரம்பிவிட்டது. இந்த அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் தேக்கி வைக்க அனுமதிக்கப்பட்ட 142 அடி தண்ணீரும் நிரம்பிவிட்டது. ஆனால் கேரள அரசு தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருப்பதால் இதற்கு மேல் இந்த அணையில் நீரை தேக்க முடியாது. அதே சமயம் இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்தால் இடுக்கி அணையில் இருந்து அதிக நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பதும் இதனால் கேரளா மேலும் வெள்ளத்தில் சிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் கேரளா தனது வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே 155 அடி வரை முல்லை பெரியாறு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தமிழகம் பலமுறை கேட்டுக்கொண்டும் வழக்கை வாபஸ் பெற முடியாது என்று மறுத்த கேரளா தற்போது இயற்கை கற்றுக்கொடுக்கும் பாடத்தை ஏற்று வழக்கை வாபஸ் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout