சசிகலாவை ஆதரிக்க ரூ.5 கோடி. கருணாஸ் மீது புலிப்படை நிர்வாகிகள் புகார்

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

கடந்த சில நாட்களாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கருணாஸ் நீக்குவதும், நிர்வாகிகள் கருணாஸை நீக்குவதுமான சம்பவங்கள் நடைபெற்று ஊடகங்களுக்கு தீனியை போட்டு வருகின்றன.

இந்நிலையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா அணியை ஆதரிக்க கருணாஸ் ரூ 5 கோடி பெற்றதாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள், 'கூவத்தூர் பங்களாவில் கருணாஸ் இருந்தபோது புலிப்படையின் நிர்வாகிகளை அழைத்து பேசியதாகவும், சசிகலா தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்துவிட்டதாகவும் கூறியதாக தெரிவித்தனர். ஆனால் கருணாஸ் உண்மையில் ஐந்து கோடி ரூபாய் பெற்றதாகவும், அதை மறைத்துவிட்டு தங்களிடம் ஒருகோடி தான் பெற்றதாக கருணாஸ் தங்களிடம் உண்மையை மறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதன்மூலம் சசிகலா தரப்பிடம் கருணாஸ் பணம் பெற்றுக்கொண்டது உண்மை என தெரிகிறது. ஆனால் இதை கருணாஸ் தரப்பினர் மறுத்துள்ளனர்.