உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியின் ஆச்சரியத்தக்க முன்னேற்றம்!

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்த சில வாரங்களுக்கு 10வது இடத்திற்கு இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி ஒருசில நாட்களில் பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 8வது இடத்தை பிடித்தார். அதன்பின் மீண்டும் சில நாட்களில் 6வது இடத்தில் இருந்த எலோன் மஸ்க் மற்றும் 7வது இடத்தில் இருந்த கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகியோர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு 6வது இடத்தை பிடித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் முகேஷ் அம்பானி உலக கோடீஸ்வரர் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துவிட்டார். தற்போது அவருக்கு முன் அமேசான் நிறுவனர் ஜெப் பெசொஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகிய மூவர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மூவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை முகேஷ் அம்பானி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்ததால் அவரது நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வருவதால் உலக பணக்காரர் பட்டியலில் அவரது இடமும் முன்னேறி கொண்டே வருகிறது. முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 80.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறக்கப்போகும் குழந்தையை பார்க்காமல் உயிரிழந்த விமானி: கேரள விமான விபத்தின் சோகக்கதை

கேரள மாநில விமான விபத்தில் உயிரிழந்த இணைவிமானி அகிலேஷ்குமார் என்பவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும்

கொரோனா பாதிப்படைந்த அபிஷேக்கின் நிலை என்ன? அமிதாப் பரபரப்பு டுவீட்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்

தஞ்சை மருத்துவமனை விவகாரம்: ஜோதிகாவின் பாராட்டுக்குரிய செயல்!

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, 'தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அந்த மருத்துவமனை பராமரிப்பு சரியில்லாமல்

சமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு!!! திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்!!!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பயங்கரச் சதித்திட்டங்கள் தீட்டப்படுகிறது என்ற கருத்தை வலுவாக நம்பி, அப்படியான கருத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதித்து

கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமான டேபிள் டாப் ரன்வே!!! பதற வைக்கும் விபத்து பின்னணி!!!

நேற்று துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 விமானம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது 35 அடி தாழ்வான பள்ளத்தில் விழுந்ததால்