சென்னையில் மு.க.ஸ்டாலின்-முகேஷ் அம்பானி சந்திப்பு!

  • IndiaGlitz, [Tuesday,February 12 2019]

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபர் முகேஷ் அம்பானி பல்வேறு பணிகளுக்காக நேற்று சென்னை வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா உதயநிதி உள்பட குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷோல்கா மேதாவுக்கும் வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மகனின் திருமணத்திற்காக முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு முகேஷ் அம்பானி அழைப்பிதழை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு தனது மனைவி நீடா அம்பானியுடன் வந்த முகேஷ் அம்பானி திருமண அழைப்பிதழை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

முகேஷ் அம்பானியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், திருமணத்திற்கு கண்டிப்பாக வருகை தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.