சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்ட சொகுசு ஹோட்டலின் முக்கால்வாசி பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் முகேஷ் அம்பானி ஹோட்டல் வணிகத்தில் கால்பதித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நெட்வொர்க், ஆயில் முதற்கொண்டு பல்வேறு தொழில்துறை வணிகத்தை செய்துவரும் முகேஷ் அம்பானி நியூயார்க்கில் உள்ள மாண்ட்ரின் ஓரியண்டல் எனும் ஹோட்டலின் 73.37% பங்குகளை விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 98.15 அமெரிக்கா டாலர் மதிப்புக்கொண்ட இதன் இந்திய மதிப்பு ரூ.729 கோடி. கடந்த 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மாண்ட்ரின் ஓரியண்ட் ஹோட்டல் உலக அளவில் பிரசித்திப்பெற்ற ஹோட்டலாக இருந்துவருகிறது.
கடந்த 2018-115 மில்லியன், 2019-113 மில்லியன், கொரோனா நேரத்தில் 2020 -15 மில்லியன் வருமானத்தை ஈட்டித்தந்த இந்த ஹோட்டல் எதிர்காலத்தில் கொள்ளை லாபத்தைக் கொடுக்கும் என்பதால் அவர் இந்த ஹோட்டலை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கேமன் தீவில் உள்ள கொலம்பஸ் சென்டர் கார்ப்பரேஷனின் முழு பங்கையும் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் முகேஷ் அம்பானி தனது வர்த்தகத்தை அமெரிக்காவில் ஆழமாகக் கால்தடம் பதித்து உள்ளார் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments