8வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி: விரைவில் 5வது இடம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களுக்கு முன் உலக பணக்காரர் பட்டியலில் 10வது இடத்திற்கு வந்த முகேஷ் அம்பானி ஒருசில நாட்களில் 8வது இடத்தில் இருந்த பங்குச்சந்தை மேதை வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 8வது இடத்தை பிடித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது 6வது இடத்தில் இருந்த எலோன் மஸ்க் மற்றும் 7வது இடத்தில் இருந்த கூகுள் நிறுவனர் லாரி பேஜ் ஆகியோர்களையும் பின்னுக்கு தள்ளி முகேஷ் அம்பானி 6வது இடத்தை பிடித்துவிட்டார். விரைவில் அவர் 5வது இடத்தில் உள்ள ஸ்டீவ் பால்மர் அவர்களையும் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த மார்ச் மாதம் முதல் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக மே மாதம் ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் முகேஷ் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்த பின்னர் அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்தது வருவதால் தான் உலக பணக்காரர் பட்டியலில் அவரது இடமும் முன்னேறி கொண்டே வருகிறது. முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் பல கோடிகளை ஈட்டி வரும் நிறுவனங்கள் ஜியோ மீது முதலீடுகளை குவிக்க தொடங்கி உள்ளது என்பதும், ஜியோவின் 25.24% பங்குகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மொத்தம் ரூ. 118,318.45 முதலீடுகளை ஈட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
தற்போது உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில ஜெப் பெசொஸ், 2ஆம் இடத்தில் பில் கேட்ஸ் , 3ஆம் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், 4ஆம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், 5ஆம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் உள்ளனர். 6ம் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி விரைவில் 5ஆம் இடம் பெற்றால் அது இந்தியாவுக்கே பெருமை என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments