வாயே திறக்காத எம்.எஸ்.வி., வார்த்தைகளை விடும் ராஜா, ஆம் ராஜாவின் இசையில்தான் உயிர் வாழ்கிறோம், கங்கை அமரனின் கல கல... பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய இசை உலகின் அரசனாக கொண்டாடப்படும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்.
கங்கை அமரன் தமிழ்த் திரைப்பட உலகில் ஓர் இசை அமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் பன்முகத் திறமை காட்டியவர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் தன் தனித்திறமையால் முத்திரை பதித்தவர்.
கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன்,கோவில் காளை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.
வாழ்வே மாயம், சின்னத்தம்பி பெரிய தம்பி, ஜீவா, சுவரில்லா சித்திரங்கள், நீதிபதி, போன்ற படங்களுக்கு இசை அமைத்தவர். தற்போது விஜய் நடித்து வெளிவரவுள்ள GOAT படத்திலும் பாடல் எழுதியுள்ளார்.
Indiaglitz நேயர்களுக்கு அவர் இளையராஜாவின் பேச்சை வைத்து ஏற்படுத்தப்படும் சர்ச்சை குறித்தும், பல்வேறு ஸ்வாரஸ்யமான தகவல் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசியிருப்பதாவது:
எம். எஸ்.வி. எனும் இசை மேதையோடு பழக வாய்ப்பு கிடைத்ததெல்லாம் பாக்கியம். அவர் பல இடங்களில் தனத்துக்கு ராகங்கள் குறித்து தெரியாதது போல் காட்டிக்கொள்வார். ஆனால் அவருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.
எனக்கு உண்மையில் ராகங்கள் குறித்து ஒன்றும் தெரியாது. முழுக்க , முழுக்க கேள்வி ஞானம் மட்டுமே.
இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்தான் இளையராஜாவையும், என்னையும் அறிமுகம் செய்தது என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.....
மற்ற தகவல்கள் இந்த பேட்டியின் அடுத்த பாகத்தில்...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments