நடைபாதை வியாபாரிகள் முதல்… அதிமுக தேர்தல் அறிக்கையை பாராட்டி வருவதாகக் கருத்து!
- IndiaGlitz, [Friday,March 19 2021]
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையைக் குறித்து பல முனைகளில் இருந்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருவதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது. அதிலும் நடைபாதை வியாபாரிகள் முதல் சிறுகுறு தொழில் முனைவோர்கள் இத்தேர்தல் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லா சுழல் நிதி, வணிகர்களுக்கு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறு குறுதொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் சலுகை 250 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வியாபாரிகளிடையே வரவேற்பு பெற்று இருப்பதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது.
மேலும் இத் தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 ஆயிரம் வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் சிறுகுறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரை திறனாக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய திட்டங்களினால் சிறு வியாபாரிகள் முதல் சிறு குறு தொழில் புரிபவர்கள் வரை அனைவரும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பாராட்டி வரவேற்பு அளித்து வருவதாக அதிமுக சார்பில் கூறப்படுகிறது.