சிஎஸ்கே கேப்டன் பதவி: தோனி எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் தோனி, இந்த ஆண்டும் அணியில் இடம் பெற்றதை அடுத்து அவர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் சற்று முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன் பதவியில் இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஜடேஜா கேப்டன் பதவியை ஏற்பார் என்றும் கூறப்பட்டிருப்பது தோனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 14 ஆண்டுகளாக ஒரே அணியில் கேப்டன் பதவியில் இருந்தவர் தோனி மட்டுமே என்ற சாதனை இருக்கும் நிலையில் இந்த ஆண்டு திடீரென அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் தோனி ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஒரு சிறந்த கேப்டனை உருவாக்கி விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக ஜடேஜாவை கேப்டன் ஆக்கி இந்த தொடரில் அவருக்கு வழிகாட்டியாக இருப்பார் என்றும் அடுத்த ஆண்டு முதல் ஜடேஜா தனித்து கேப்டனாக செயல்படும் வகையில் அவருக்கு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதே தோனியின் முடிவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.
 

More News

சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா: 4 நிமிட ஐட்டம் பாடலின் வீடியோ வைரல்!

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்கள் என்பதையும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா, ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினா,

செல்வராகவனை மனவலியுடன் தான் பிரிந்தேன்: சோனியா அகர்வாலின் அதிர்ச்சி பேட்டி!

இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்த நான்கு ஆண்டுகளில் விவாகரத்து செய்த நடிகை சோனியா அகர்வால் அவரை மிகுந்த மன வலியுடன் தான் பிரிந்தேன் என சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது

பிக்பாஸில் இருந்து வெளியேறி புலி, சிங்கமாக மாற விரும்பும் அனிதா!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா, 'ஒரு பெண் இந்த நவீன உலகில் மென்மையாக தான் இருக்க முடியுமே தவிர புலி சிங்கம் சூரியனாக இருக்க முடியாது என்று கூறியுள்ளது

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு: உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல பாடகி சென்ற விமானம் மின்னல் தாக்கியதால் பரபரப்பு… பதறும்  ரசிகர்கள்!

அமெரிக்காவின் பாப் இசை பாடகியும் நடிகையுமான மைலி சைரஸ் சென்ற விமானம் நேற்று பராகுவே செல்லும் வழியில் மோசமான