துப்புரவு பணியாளர் வேலையில் சேர்ந்த எம்.எஸ்.சி படிக்கும் பெண்..!

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

கோவையில் எம்.எஸ்.சி படிக்கும் பெண் மாநகராட்சி துப்புரவாளர் பணியில் சேர்ந்துள்ளார்.கோவையில் மாநகராட்சியில் காலியாக இருந்த 549 துப்புரவு பணியாளர்கள் இடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு விடப்பட்டிருந்தது. இந்த வேலைக்கு பி.எஸ்.சி, பி.காம், பி.இ படித்த பட்டதாரிகள் உட்பட 7,300 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. அதில் 321 பேருக்கு குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பணிநியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கோவை தெலுங்குப்பாளையாத்தைச் சேர்ந்த மோனிகா என்பவருக்கு பணிநியமன ஆணையானது வழங்கப்பட்டது. இவர் எம்.எஸ்.சி படித்து வருகிறார்.படித்திருக்கிறேன் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டேன் என்பதிலை எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன் என கூறியுள்ளார்.

More News

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா??? காங்கிரஸ்க்கு எதிராகத் திரும்பியது ஏன்??? 

மத்தியப் பிரதேச சட்ட சபையில் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சி தொடருமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்

நடிகர் சங்கத் தேர்தல்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிலையில் அந்த தேர்தல் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் புதிய தேர்தலை 3 மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

கூவி..கூவி.. விற்கப்படும் கொரோனா. சிரிக்காம பாருங்க இந்த வீடியோவை..!

வியாபாரி ஒருவர் முகத்திற்கு அணியும் மாஸ்குகளை கொரோனா கொரோனா என கூவி கூவி விற்று வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்புகள்.. அசராமல் பதவியேற்ற அஷ்ரப் கனி..! வைரல் வீடியோ.

நான் புல்லட் ப்ரூஃப் ஆடை எதுவும் அணியவில்லை. வெறும் சட்டைதான். இந்த குண்டுகளெல்லாம் என்னைக் கொல்லாது. உயிரிழந்தாலும் இங்கு தான் இருப்பேன். மக்களுக்காகவே பணி புரிவேன்.

பா.ஜ.க. வில் இணையப் போகிறாரா??? மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப் பிரதேச அமைச்சரவையில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.