அப்பா சொன்ன அந்த ஒன்றை கடைபிடிக்கிறேன்: 100 கோடி சம்பாதிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் மகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
என் அப்பா சொன்ன அந்த ஒன்றை நான் தொடர்ந்து கடைபிடித்து வருவதால் நான் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன் என மறைந்த மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் மகள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதனின் மகள் லதா மோகன் ஸ்பலான் இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற பியூட்டி பார்லர்களை நடத்தி வருகிறார். 450-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளி ஆன இவர் வருடத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
தனது வெற்றி குறித்து லதா மோகன் கூறுகையில், அழகு கலையில் எனக்கு ஆர்வம் இருந்ததால் இதை பிசினஸ் ஆக செய்ய வேண்டும் என்று யோசித்தேன். 1981 ஆம் ஆண்டு கன்யா என்ற பெயரில் முதல் பியூட்டி பார்லரை தொடங்கினேன். வெற்றி அடைந்தால் சந்தோஷம், இல்லை எனில் அனுபவம் என்று நினைத்து தான் நான் இந்த தொழிலை தொடங்கினேன்.
ஆரம்ப கட்டத்தில் எனக்கு நிறைய சவால்கள் மற்றும் சிரமங்கள் இருந்தது. என் அப்பா கூட ’இது எல்லாம் உனக்கு தேவையா’ என்று கூறினார். ஆனால் நான் விடாப்படியாக சவால்களை சந்தித்து தொடர்ச்சியாக பல கிளைகளை தொடங்கினேன். நடிகை ஸ்ரீபிரியா எனது நண்பர் என்பதால் அவர் தான் என்னுடைய முதல் மற்றும் மூன்றாவது கிளையை திறந்து வைத்தார்.
ஒவ்வொரு கிளை திறக்கும் போதும் என் அம்மா கைராசிக்காரர் என்பதால் அவர்களைத்தான் கல்லாப்பெட்டியில் முதல் பணத்தை போட சொல்வேன். என்னுடைய வெற்றியை பார்த்து எனக்கு வாழ்த்து கூறிய என் அப்பா ’தொழிலில் நேர்மை, பேச்சில் செயலில் நம்பகத்தன்மை, வாடிக்கையாளரை ஏமாற்றக்கூடாது’ என்று கூறினார், அந்த ஒன்றை நான் இன்று வரை கடைபிடித்து வருகிறேன். அவர் இறக்கும்போது ’நீ உன் தனி அடையாளத்துடன் சாதித்து விட்டாய், ஒரு அப்பாவாக எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது’ என்று வாழ்த்தினார்.
மேலும் இரண்டு மூன்று நிறுவனங்களின் பெயர்களில் 50க்கும் மேற்பட்ட பார்லர்கள் எனக்கு இருக்கிறது, இந்திய அளவில் எங்கள் நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்று உள்ளது’ என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments