எம்.எஸ் சுப்புலட்சுமி கொள்ளுப்பேத்தி பாடகியாக அறிமுகமாகும் தமிழ்ப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய இனிமையான குரலால் உலகம் முழுவதிலும் உள்ள இசை விரும்பிகளை கட்டிப்போட்டவர் இசையரசி எம்.எஸ் சுப்புலட்சுமி. குழந்தைப் பருவம் முதலே இசையே மூச்சாக கொண்டு, இசையை தன்னோடு ஐக்கிப்படுத்திக் கொண்டு, எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இவருடைய இசை என்றும், என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த நிலையில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா 'குறள் 146' என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் குருகல்யாண் இசையில் ஐஸ்வர்யா பாடிய பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஐஸ்வர்யாவின் குரல் எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஞாபகப்படுத்துவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
'குறள் 146' படத்தை உமாசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இவர் கடந்து 16 வருடங்களாக கலை இயக்குனராக பணியாற்றி அதன் பின்னர் திரையுலகில் பல கட்டங்களை கடந்து இப்பொழுது இயக்குனராக தம் கலை பணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments