செல்லக்கிளியுடன் தல தோனி… இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, பண்ணை விவசாயம் மற்றும் இயற்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும் அவ்வபோது இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் என்பதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான்.

அந்த வகையில் தற்போது தல தோனி அவர்கள் வெளிநாட்டு கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். ஹனி எனப் பெயரிடப்பட்ட அந்தக்கிளி தோனி தேநீர் அருந்தும்போது அவருடைய தோளில் அமர்ந்து ஓய்வெடுக்கிறது. இதுகுறித்து, “மஹியுடன் அவரது ஹனி“ என்று கேப்ஷனோடு சாக்ஷி தோனி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தோனியின் பண்ணை வீட்டில் ஏற்கனவே சாம் (பெல்ஜியம் வகை), லில்லி, கப்பர், ஜோயா (டச்சு) எனும் 4 நாய்க்குட்டிகள் வளர்ந்து வருகின்றன. மேலும் கடந்த மே மாதம் முதல் “சதக்“ எனும் குதிரையை வளர்த்து வருவதைப் பற்றி தல தோனி, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த வரிசையில் கிளி ஒன்றும் தற்போது இணைந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற தல தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தற்போது 40 வயதாகும் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக தக்கவைத்துக் கொள்ளும் என்றே கூறப்படுகிறது. ஆனால் தன்னை அவ்வளவு விலை கொடுத்து தக்க வைக்க வேண்டாம் என்று தோனி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒரு வார்த்தை, என் வாழ்வை மாற்றியது… பிரபல நடிகை புகழாரம்!

பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் பிரபல நடிகை ராணி

உள்ளே வந்தார் அபிஷேக்: போட்டியாளர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக வீட்டை விட்டு வெளியே போன அபிஷேக் மீண்டும் உள்ளே வரப் போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்', இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது

சிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்