தலாய்லாமா கெட்டப்பில் தல தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முழுவதும் கொரோனா காரணமாக அரபு எமிரேட்ஸில் நடைபெற்று முடிந்தது. இதனால் இந்த ஆண்டு நடைபெறும் 14 ஆவது ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்று இருக்கின்றன. இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை முழுவதும் வெளியாகி அதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை விளப்பரப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்காக நேற்று ஸ்டார் போர்ஸ்ட் சேனல் வெளியிட்ட புகைப்படம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த விளம்பரத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தல தோனி தலாய்லாமா வேடத்தில் இருக்கிறார். அதோடு மொட்டைத் தலையுடன் அவர் சம்மணம் போட்டு அமர்ந்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் தல தோனியா இது? என வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்த ஐபிஎல் போட்டி தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இத்தொடர் போட்டி முழுக்க சென்னை சிஎஸ்கே சேப்பாக்கத்தில் விளையாடாமல் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய மைதானத்தில் களம் இறங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Our Thalai Lama Is Here ??????#MSDhoni • #WhistlePodu • #IPL2021 • #IndiaKaApnaMantra •
pic.twitter.com/5MB11NS5Ml
— Rajini - Dhoni FC (@RajiniDhoniFC) March 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments