தல தோனியின் அடுத்த பிளான் இதுதான்… நெருங்கிய நண்பர் வெளியிட்ட தெறிக்கவிடும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) ஒட்டுமொத்த இந்தியாவும் 74 சுதந்திரத் தினத்தைச் சிறப்பித்து கொண்டிருக்கும்போது தல தோனி தனது ஓய்வை குறித்து ட்விட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தல தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுகிறேன் என்ற வெளியிட்ட செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, இந்தியத் தலைவர்கள், பிரபலங்களையும் வருத்தப்பட வைத்தது. இந்நிலையில் ஐபிஎல், டி20 போட்டிகளை எதிர்ப்பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகிவிட்ட தல தோனி ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளிலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மட்டுமே விளையாடுவார் என்ற நிலையில் தல தோனியின் அடுத்த பிளான் என்ன என்பதைக் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பிரபல அரசியல் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி தல தோனி அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார். பாஜாக ஆளுமையும் ராஜ்யசபா எம்பியுமான சுப்பிரமணியம் சுவாமி வைத்த கோரிக்கைக்கு தல செவி சாய்ப்பாரா என்பது போன்ற விவாதங்களும் தற்போது இணையதளத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் தோனியின் மிக நெருங்கிய நண்பரும் வியாபர பார்ட்னருமான அருண்பாண்டே, தோனி இனிமேல் அதிக நேரத்தை இந்திய இராணுவத்தில் செலவழிப்பார் எனத் தெரிவித்து இருக்கிறார். வியாபார நோக்கங்கள் மற்றும் பிற விஷயங்களில் தோனி கவனம் செலுத்த வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே இந்திய இராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் ஜெனரலாக தோனி பங்கு வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிந்தப்பின் விமானப் பிரிவில் பாராசூட் பயிற்சியும் அவர் எடுத்துக் கொண்டார். மேலும் தோனி குறித்து பேசிய அருண்பாண்டே, சில விளையாட்டு வீரர்களின் ஓய்வுக்குப்பின் அவர்களின் பிராண்ட் மதிப்ப்பீடு குறைந்து விடுகிறது எனச் சொல்கிறார்கள். தோனி வெறுமனே விளையாட்டு வீரர் மட்டுமல்ல, அவர் இந்திய அணிக்காக நிறைய செய்திருக்கிறார். அவருடைய மதிப்பு எப்போதும் குறைய வாய்ப்பில்லை எனவும் கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout