பவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..! பிரக்யான் ஓஜா.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா தனது முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியைப் பாராட்டினார், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒரு பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்று கூறினார்.

2008 மற்றும் 2013 க்கு இடையில் 24 டெஸ்ட் மற்றும் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஓஜா, தோனியின் தலைமையில் தனது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலானப் போட்டிகளை விளையாடினார். “அவர் (தோனி) பவுலர்களின் கேப்டன்”. ஒரு பந்து வீச்சாளருக்கு, அவரைப் புரிந்துகொள்ளும் ஒரு கேப்டன் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தோனி உங்களுக்கு பல பரிமாணங்களை கொடுப்பது, ஃபீல்டிங்கில் உங்களுக்கு உதவுவது, விளையாடும் போது உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க உதவி செய்வது போன்ற காரணங்களால் பந்து வீச்சாளர்கள் தோனியை பாராட்டுக்கிறார்கள்,” என்றார்.

ஓஜா கடந்த வெள்ளிக்கிழமை, அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கடைசியாக 2018ம் ஆண்டு பீகார் மாநிலத்துகாக முதல் தரக் கிரிக்கெட் விளையாடினார். அங்கு அவர் சில காலம் மட்டுமே இருந்தார்.

இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டமான, 2013ம் ஆண்டில் மும்பையின் வான்கடேயில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றியின் போது, மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இது சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்டாகவும் இருந்தது.

அதேசமயம், 2020 ஐபிஎல் போட்டிகளுக்கு தோனி விளையாட வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2019 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியதில் அடுத்து, தோனி கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார்.