இதை செய்யவில்லை என்றால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவேன்: 2வது வார்னிங் கொடுத்த தோனி..

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் அவர்கள் வேறு கேப்டனின் கீழ்தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்று தல தோனி போட்டி முடிந்ததும் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடந்த சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 217 ரன்கள் எடுத்திருந்தும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் நோபால் மற்றும் வைடுபால்கள் மிக அதிகமாக வீசப்பட்டது என்பதும் எக்ஸ்ட்ரா ரன்கள் மட்டும் 18 ரன்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த தல தோனி ’சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வைட் மற்றும் நோபால்களை தவிர்க்க வேண்டும் என முதல் போட்டியிலே நான் கூறியிருந்தேன். ஆனால் இந்த போட்டியில் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேல் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் நோபால் மற்றும் வைடு பந்துகள் அதிகம் வீசினால் அவர்கள் வேறு ஒரு கேப்டன் தலைமையில் கீழ் தான் விளையாட வேண்டிய நிலை வரும் என்றும் இரண்டாவது முறையாக எச்சரிப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.