தோனி, தொடரி, ஆண்டவன் கட்டளை. கடந்த வார சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,October 03 2016]

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை நாடு முழுவதும் பெற்றது. இந்நிலையில் சென்னையில் கடந்த வார இறுதியில் இந்த படம் 19 திரையரங்க வளாகங்களில் 275 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,06,28,085 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த வாரமும் நல்ல வசூலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடித்த 'ஆண்டவன் கட்டளை' கடந்த வார இறுதியில் சென்னையில் 16 திரையரங்க வளாகங்களில் 195 காட்சிகள் ஓடி ரூ.65,87,940 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.2,01,12,310 என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த தனுஷின் தொடரி திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 21 திரையரங்க வளாகங்களில் 184 காட்சிகள் ஓடி ரூ.39,93,780 வசூல் செய்துள்ளது. கடந்த செப் 22 முதல் இந்த படம் மொத்தம் ரூ.2,62,49,080 வசூல் செய்து ஆவரேஜ் படம் என்பதை நிரூபித்துள்ளது.
சீயான் விக்ரமின் இருமுகன் கடந்த வார இறுதியில் சென்னையில் 10 திரையரங்குகளில் 70 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,64,560 வசூல் செய்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையிலும் சென்னையில் 70% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. செப் 8 முதல் நேற்று வரை இந்த படம் சென்னையில் ரூ.5,60,46,180 வசூல் செய்துள்ளது.

More News

ரிலீசுக்கு முன்பே 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரீலீஸ் ஆகவுள்ளது...

த்ரிஷாவை அடுத்து அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த அரவிந்தசாமி, நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார்.

'தோனி' படத்துக்கு புரமோஷன் செய்யும் விஜய் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு செல்வராகவன் கொடுக்க விரும்பும் பட்டம் இதுதான்.

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

சிம்புவின் 'மதுரை மைக்கேல்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு முதன்முதலாக மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.