தோனி, தொடரி, ஆண்டவன் கட்டளை. கடந்த வார சென்னை வசூல் நிலவரம்
- IndiaGlitz, [Monday,October 03 2016]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை நாடு முழுவதும் பெற்றது. இந்நிலையில் சென்னையில் கடந்த வார இறுதியில் இந்த படம் 19 திரையரங்க வளாகங்களில் 275 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,06,28,085 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த வாரமும் நல்ல வசூலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடித்த 'ஆண்டவன் கட்டளை' கடந்த வார இறுதியில் சென்னையில் 16 திரையரங்க வளாகங்களில் 195 காட்சிகள் ஓடி ரூ.65,87,940 வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.2,01,12,310 என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த தனுஷின் தொடரி திரைப்படம் சென்னையில் கடந்த வாரம் 21 திரையரங்க வளாகங்களில் 184 காட்சிகள் ஓடி ரூ.39,93,780 வசூல் செய்துள்ளது. கடந்த செப் 22 முதல் இந்த படம் மொத்தம் ரூ.2,62,49,080 வசூல் செய்து ஆவரேஜ் படம் என்பதை நிரூபித்துள்ளது.
சீயான் விக்ரமின் இருமுகன் கடந்த வார இறுதியில் சென்னையில் 10 திரையரங்குகளில் 70 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.12,64,560 வசூல் செய்துள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் நெருங்கியுள்ள நிலையிலும் சென்னையில் 70% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. செப் 8 முதல் நேற்று வரை இந்த படம் சென்னையில் ரூ.5,60,46,180 வசூல் செய்துள்ளது.