ஐபிஎல் வெற்றிக்கு பிறகு எம்.எஸ்.தோனிக்கு அறுவைசிகிச்சை? பதட்டத்தில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு தனது இடது முழங்காலில் அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் பதற்றத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 16 ஆவது சீசன் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டண்ஸ் அணியுடன் மோதி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது. இதையடுத்து கேப்டன் தோனியை சிஎஸ்கே ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் தோனி மும்பையில் உள்ள மருத்துமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தகவல் கூறப்படுகிறது.
41 வயதாகும் தோனி ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவாரா என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து அச்சத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 16 ஆவது சீசன் போட்டியில் கலந்து கொண்டு சிஎஸ்கேவிற்கு வெற்றிக்கோப்பை பெற்றுத் தந்துள்ளார். இந்நிலையில் அவர் இந்த சீசன் போட்டி முழுக்கவே தனது இடது முழங்கால் பகுதியில் காயத்துடன் விளையாடி வந்ததாகவும் அது கீப்பிங் செய்யும்போது நன்றாகவே தெரிந்தது என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஐபிஎல் போட்டியை முடித்த தோனி அகமதாபாத்தில் இருந்து நேரடியாக மும்பைக்கு சென்றதாகவும் அங்குள்ள கோகிலா பென் மருத்துவமனையில் மருத்துவர் டின்ஷா பார்திவாலாவிடம் ஆலோசனை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தோனிக்கு இடது முழங்கால் பகுதியில் நேற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து தோனி இன்னும் ஒருசில நாட்களில் வீட்டிற்கு திரும்பிவிடுவார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மேலும் தோனியைப் போலவே ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இந்தியக் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திற்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout