சூப்பர் ஸ்டார் ரஜினியின் அவதாரமாக மாறிய தல தோனி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Sunday,February 27 2022]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனியின் புதிய கிராபிக்ஸ் நாவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதன் முதல் பிரதியை வெளியிட்டார் என்பதும் தெரிந்ததே.

மேலும் எம்எஸ் தோனி அவதார் கிராபிக்ஸ் நாவலில் வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததையும் அந்த புகைப்படம் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகவே எம்எஸ் தோனி மாறி கண்ணாடியை ஸ்டைலாக அணியும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காட்சியும் அவருடைய அவதார கிராபிக் நாவல் இருக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியாக மாறிய தோனியின் இந்த வீடியோவை ரஜினிகாந்த் மற்றும் தோனியின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்

தோனியின் ‘அதர்வா’ கிராபிக்ஸ் நாவலை தமிழகத்தை சேர்ந்த ரமேஷ் தமிழ்மணி என்பவர் தான் உருவாக்கி உள்ளார் என்றும் இந்த நாவலுக்கு சிவா சந்திரிகா என்பவர் தான் திரைக்கதை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவருமே சிம்புவின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.