சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீண்டும் தல தோனி!

  • IndiaGlitz, [Thursday,January 04 2018]

11வது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்க உள்ள வீரர்கள் பெயரை இன்று மாலை அறிவிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் இந்த ஆண்டு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனி இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது

சற்றுமுன்னர் வெளிவந்த செய்தியின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிய்ல் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோர்கள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தோனிக்கு ரூ.15 கோடியும், ரெய்னாவுக்கு ரூ.11 கோடியும், ஜடேஜாவுக்கு ரூ.7 கோடியும் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

இதேபோல் பெங்களூர் அணிக்கு விராத் கோஹ்லியும், மும்பை அணிக்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்களும், டெல்லி அணியில் எஸ்.எஸ்.ஐயரும், ஐதராபாத் அணியில் வார்னரும் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் இம்மாதம் 27 மற்றும் 28-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இம்முறை ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக செலவிடும் ஒட்டுமொத்த தொகை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரூ.500க்கு கூவிக்கூவி விற்கப்படும் ஆதார் தகவல்கள்: அதிர்ச்சி தகவல்

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்த மத்திய அரசு, ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்திருந்தது.

விஷாலுக்கு இருந்த தில் கமலுக்கு இல்லை: டிடிவி தினகரன்

வெற்றி பெற்றவர்களை விமர்சிக்கும் கமலுக்கு ஆர்.கே.நகரில் போட்டியிட துணிச்சல் இல்லாமல் போனது ஏன் எனக் கேள்வி எழுப்பிய தினகரன், விஷாலுக்கு இருந்த தில் கமலுக்கு இல்லை' என்று கூறினார்

கமல், ரஜினியை கடுமையாக தாக்கி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் இன்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

ரஜினியுடன் இணைந்து ஆன்மீக அரசியல்! பரிசிலீப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது குறித்து ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக அரசியலை ஆக்ஸ்போர்ட் அறிஞர்களால் தான் விளக்க முடியும்: ராமதாஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை எந்த அரசியல்வாதியும் பயன்படுத்தாத வார்த்தைகளான 'ஆன்மீக அரசியல்' என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.