ஒரு புலி இன்னொரு புலியை புகைப்படம் எடுத்திருக்கிறது..! தோனி பற்றிய வைரல் கமெண்ட்.

எம்.எஸ்.தோனி, அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் இணையவுள்ளார். கன்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். தோனி மற்றும் மனைவி சாக்‌ஷி இருவரும் கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள கன்கா தேசிய பூங்காவுக்கு சென்றிருந்தனர்.

பூங்காவில் தான் எடுத்த புலியின் புகைப்படத்தை பகிர்ந்து, தன்னுடைய பயணத்தை ‘சிறந்த' பயணம் என்று குறிப்பிட்டார் தோனி. நீங்கள் புலியை காண முடிந்தால் அது ஒரு சில புகைப்படம் எடுக்க போதுமான நேரத்தை உங்களுக்கு அளிக்கிறது. கன்ஹாவுக்கு சென்றது சிறப்பான பயணம், என்று பதிவிட்டார். இதனை, ‘புலியை படம் எடுத்த புலி’என்று தோனியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

ரசிகர் ஒருவர் தோனியை புலி என்று குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடைசியாக, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மாலதீவுகள் சென்றிருந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஆர்பி சிங் மற்றும் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவுடன் புகைப்படத்தை பதிவிட்டார். அந்தப் பதிவில், அவர் ஆர்பி சிங் மற்றும் பியூஷ் சாவ்லாவுக்கு பானி பூரி பரிமாறிக்கொண்டிருந்தார். கடந்த ஜனவரி 16ம் தேதி, வருட ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனியை நீக்கியது பிசிசிஐ. தோனியை தவிர தினேஷ் கார்த்திக் மற்றும் கலீல் அகமது ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக அரையிறூதியில் ஆட்டம் இழந்ததை அடுத்து தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தவுள்ளர் தோனி. ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது.
 

More News

1700 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோணா தொற்று... திணறும் சீனா.

சீனாவில் 1,700 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

தமிழர்களைக் கொன்ற இலங்கை ராணுவ தளபதி அமெரிக்காவுக்குள் நுழைய தடை..!

2009ல் நடந்த ஈழ இறுதிப் போரில் லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த படையணியின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் வர அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது.

'கனா' படத்தை தயாரித்ததால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மரியாதை!

மகளிர் உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அணுகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

முதல்வருக்கு நன்றி கூறிய பிரபல நடிகரின் மகள்!

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் செங்கோட்டையனை

உலகின் அதிவேக வீரரான உசைன் போல்டின் சாதனையை முறியடித்த இந்திய இளைஞர்

8 முறை உலக சாதனை புரிந்த தடகள வீரர் உசைன் போல்ட்டின் சாதனையை கர்நாடக இளைஞர் ஒருவர் வீழ்த்தி இருக்கிறார்.