ஐபிஎல்-லை வைத்துக்கொண்டு தீவிர டென்னிஸ் பயிற்சியில் தோனி… என்ன காரணம்?
- IndiaGlitz, [Thursday,February 03 2022] Sports News
ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் பெங்களூருவில் வரும் 12,13 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் ஏப்ரலில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் மகேந்திர சிங் தோனி அவர்கள் தீவிரமாக டென்னிஸ் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சிஎஸ்கே நிர்வாகம் நடத்திய 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலம் தொடர்பான கூட்டத்தில் அந்த அணியின் கேப்டன் தோனி கலந்துகொண்டார். பின்பு பெங்களூருவில் நடைபெற இருக்கும் ஏலத்தில் அவர் நேரடியாக கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூரு செல்லாத தோனி நேரடியாக ராஞ்சி சென்றதைத் தொடர்ந்து அங்கு தீவிர டென்னிஸ் பயிற்சி எடுத்துக் கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து தோனி ஓய்விற்குப் பிறகு டென்னிஸ் விளையாடப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் இவரைப் போன்ற சில முன்னணி வீரர்கள் ஓய்விற்குப் பிறகு வேறு சில போட்டிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ஓய்விற்குப் பிறகு கால்பந்து வீரராக மாறினார். தற்போது தோனியும் இதுபோன்ற ஒரு முடிவை எடுத்துள்ளாரா எனச் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தோனி தனது உடற்பயிற்சிக்காகத்தான் இப்படி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சச்சினும் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் டென்னிஸ் விளையாடுவாராம். காரணம் கண்ணும் கையும் ஒரே நேரத்தில் கூர்மையாக இருப்பதற்கு சில விளையாட்டு வீரர்கள் இதுபோன்று வேறுசில விளையாட்டுகளில் கவனம் செலுத்திவருகின்றனர். தோனி இதற்கு முன்பு பேட்மிண்டன், கால்பந்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இப்படி செய்யும்போது கையும் கண்ணும் ஒரே சீரான வேகத்தில் இயங்கி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் 40 வயதான தோனிக்கு தசையோட்டத்தையும் இது சீராக்கும் என நம்பப்படுகிறது. எனவே பேட்டிங்கில் ஜொலிக்கத்தான் தோனி தற்போது டென்னிஸ் விளையாடுகிறார் என்ற தகவலை கேள்வியுற்ற அவரது ரசிகர்கள் மீண்டும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.
Highlights of yesterday's tennis match ??❤️#MSDhoni • #Dhoni • #WhistlePodu pic.twitter.com/3oCS0bZU2D
— Nithish Msdian (@thebrainofmsd) February 2, 2022