உலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தல தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார் இன்னும் சில ஆண்டுகளில் கிரிக்கெட்டில் நீடிப்பார் என்றும் இருவேறு கருத்துக்கள் பரவியுள்ளன. மேலும் திடீரென பாஜகவில் தோனி சேர இருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வந்தது 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனி இன்று பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் தான் துணை ராணுவப் பணியில் இரண்டு மாதங்கள் ஈடுபட உள்ளதாகவும் அதனால் மேற்கிந்தியத் தீவு சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும் அவர் எழுதியுள்ளார். இதனை அடுத்து தோனி மேற்கிந்திய தீவுகள் தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. தோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் நாட்டிற்காக சேவை செய்ய இந்திய ராணுவத்தில் பணிபுரிய தோனி எடுத்திருக்கும் முடிவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

அனுஷ்காவின் அடுத்த படத்தின் ஆச்சரிய அறிவிப்பு

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு பிரமாண்டமான வெற்றி படங்களை அடுத்து நடிகை அனுஷ்கா கடந்த ஆண்டு பாகிமதி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார்.

இன்று கமல் முன்னிலையில் கவின் காதல் பஞ்சாயத்து?

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் இரண்டே இரண்டு பிரச்சனைகள்தான். ஒன்று கவினின் காதல் பஞ்சாயத்து, இன்னொன்று வழக்கம்போல் மற்றவர் மீது மீரா சுமத்தும்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? அதிர்ச்சித் தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பாத்திமா பாபு மற்றும் வனிதா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த முன்னாள் பாஜக எம்பி

சூர்யா நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அவர் தற்போது 'சூரரைப்போற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்டவர்களுக்கு சூர்யாவின் பதிலடி அறிக்கை

கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது.