திடீர் ரன் அவுட்… இந்திய அணிக்காக கலங்கி அழுத தோனி... ஆண்டுகள் கடந்தும் ரணமான சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியை கரை சேர்ப்பதற்காக கடைசி வரை போராடி தோற்றுப்போன தோனி 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. கூடவே தோனி ஓய்வை அறிவித்து மேலும் அதிர்ச்சியை கொடுத்த கோரமான சமபவம் நடைபெற்ற நாள் இன்று.
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் அதிகப் புள்ளிகளுடன் முன்னணி வரிசையில் இடம்பிடித்த இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக படு தோல்வியடைந்தது.
ஐசிசி போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி வெற்றிப்பெறாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் அனைத்துவித போட்டிகளிலும் 3 ஐசிசி கோப்பைகளை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்த பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது 2019 இல் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தபோது அணியின் வெற்றிக்காக தோனி போராடிய காட்சிகளும் அதற்கு பிறகு இந்திய ரசிகர்கள் கண்ணீர் மல்க அழுத காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக 10 அணிகள் பங்கேற்ற லீக் போட்டிகளில் அதிகப் புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த இந்திய அணி 2019 இல் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக கம்பீரத்துடன் களம் இறங்கியது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியானது கடுமையான மழை, வெயில் காரணங்களுக்காகத் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் ரிசர்வ் டே ஒன்றில் (ஜுலை 10) நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 240 ரன்களை எடுத்த நிலையில் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் ராகுல், ரோகித், கேப்டன் கோலி என மூவரும் தலா ஒரு ரன்களுடன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகள்தான் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பெரும் சுமையாக அமைந்தது என்றே கூறலாம்.
இவர்களை அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் படுவேகமாக வெளியேறினார். தொடர்ந்து பண்ட் மற்றும் பாண்டியா இருவரும் ஜோடி போட்டு சிறிது நேரம் விளையாடிய பின்னர் ஆட்டம் இழந்தனர். அந்த வகையில் இந்திய அணி 100 ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்தத் தருணத்தில் சரிந்துபோன இந்திய அணியை தேற்றிவிட வந்தவர்தான் தோனி மற்றும் ஜடேஜா இருவரும். இதில் ஜடேஜா அதிரடியாக ஆடினார். எதிர்புறத்தில் தோனி தனக்கே உரித்தான பாணியில் விளையாடிக் கொண்டிருந்தார். இவர்களது கூட்டணியைப் பார்த்த ரசிகர்கள் எப்படியாவது இந்தியா வெற்றிப் பெற்றுவிடும் என்றே நினைத்தனர்.
ஆனால் 77 ரன்களை எடுத்த ஜடேஜா ஒரு பந்திற்கு சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து 2 ஓவர்களில் 31 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிலையில் விளையாடி வந்த தோனி ஃபெர்குசன் ஓவரில் 49 ஆவது ஓவரின் 3 ஆவது பந்திற்கு ஃபைன் லெக் திசையில் அடித்து 2 ரன்களை எடுக்க முயன்றார். ஆனால் துருதிஷ்டவசமாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் போட்ட சரியான த்ரோவால் தோனி ஆட்டமிழந்தார்.
இதனால் இந்திய அணியை காப்பாற்ற முடியாமல் தலையை தொங்க போட்டபடியே தோனி கிரவுண்டை விட்டு வெளியேறிய காட்சிகளைப் பார்க்க முடிந்தது. இதையடுத்து சில பந்துகளிலேயே இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆல் அவுட்டாகி போட்டியில் தோல்வி அடைந்தனர். இந்தத் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார்.
ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களும் பிரபலங்களும் இந்திய அணிக்காக விசனப்படத்தும் அழுததும் இன்றைக்கும் மறக்க முடியாத ஒரு ரணமாகவே இருந்து வருகிறது. அதிலும் ரோகித் சர்மா கண்ணீர் சிந்தி அழும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் இந்திய அணிக்கு இப்படி ஒரு நிலமையா? என்று குமுறி விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.
முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தோல்வி. நம்பிக்கை நட்சத்திரமான தோனி இருந்தும் அணியைக் காப்பாற்ற முடியாமல் போன சோகக்கதை என்று இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் 2019 உலகக்கோப்ப அரையிறுதிப் போட்டி என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments