குழந்தையாவே மாறிட்டாரே? நடுவீட்டில் புது நண்பருடன் கொஞ்சி விளையாடும் தல தோனி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளங்கிவரும் தல தோனியை விரும்பாத ரசிகர்களே இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு நிதானமான மனிதராக கிரிக்கெட் வட்டாரத்தில் புகழப்படுகிறார்.
40 வயதாகும் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே தற்போது கவனம் செலுத்திவருகிறார். முன்னதாக டி20 உலகக்கோப்பை போட்டிக்கு மென்டராக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி கலந்து கொள்வாரா? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். ஆனால் இதற்கு கொஞ்சமும் இடம் கொடுக்காத சென்னை ஐபிஎல் அணி நிர்வாகம் தோனி, ருத்ரவாஜ் கெயிக்வாட், ஜடேஜா, மொயின் அலி ஆகியோரைத் தக்க வைத்துள்ளது.
ஏற்கனவே 4 முறை சென்னை சிஎஸ்கே அணிக்காக கோப்பையை வாங்கிக்கொடுத்த தோனி தற்போது ஐபிஎல் துவங்குவதற்கு முன்பு தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் ஓய்வாக அமர்ந்திருக்கும் தோனியுடன் அவரது புது நண்பரான “சேடக்“ கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் நடு வீட்டில் குதிரை… இது வீடுதானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விலங்குகள் மீது தோனிக்கு இருக்கும் ஆர்வத்தையும் சிலர் பாராட்டி வருகின்றனர்.
தோனி ஒரு பைக் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதுமட்டுமல்ல அவருக்கு விவசாயம் மற்றும் இயற்கை மீதும் அதிக ஆர்வமிருக்கிறது. எனவே ஓய்வுக்கிடைக்கும் போதெல்லாம் தனது பண்ணை வீட்டில் தங்குவதையே அதிகம் விரும்புகிறார். மேலும் தனது பண்ணை வீட்டில் ஏராளமான செல்லப்பிராணிகளையும் அவர் வளர்த்து வருகிறார்.
அந்த வகையில் “ஹனி” எனப் பெயரிடப்பட்ட வெளிநாட்டு பஞ்சவர்ணக் கிளி ஒன்றையும் அவர் வளர்த்து வருகிறார். மேலும் சாம், லில்லி, கப்பர், ஜோயா என்று 4 நாய்க்குட்டிகளை பராமரித்து வரும் அவர் தொடர்ந்து “சேடக்“ என்று குதிரையையும் தற்போது தனது பட்டியலில் இணைந்திருக்கிறார். அந்தக் குதிரையுடன் தோனி கொஞ்சி விளையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments