ஒருநாள், டி-20 அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தோனி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இருப்பினும் இம்மாதம் நடைபெறும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் தோனி விக்கெட் கீப்பராக தொடர்வார் என்றும் பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
தோனியின் இந்த முடிவு குறித்து அவருடைய மேனேஜர் அருண்பாண்டே கூறியபோது, 'தோனி எடுத்த இந்த முடிவு ஒரே நாளில் திடீரென எடுக்கப்பட்டது அல்ல. தீர ஆலோசித்தே கேப்டன் பொறுப்பில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என்ற முடிவை அவர் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அவரது பணி தொடரும்' என்று கூறியுள்ளார்.
இதுவரை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த கேப்டன்களில் மிகச்சிறந்த கேப்டனாக கருதப்படும் தோனி, கடந்த 2007ஆம் ஆண்டு டி-20 உலக்கோப்பையை பெற்று தந்தார். மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணி கைப்பற்றவும், 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியையும் பெறவும் முக்கிய காரணமாக இருந்தார்.
199 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 110 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். அதேபோல் 72 டி-20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 41 போட்டிகளில் வெற்றிக்கனியை தட்டி பறித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு வேண்டுமானால் கேப்டன் மாறலாம். ஆனால் அடுத்த வருடம் முதல் களம் புகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்றுமே கேப்டனாக தோனிதான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments