தோனிக்கு 50% அபராதம்: கூல் கேப்டனையே கடுப்பேத்திய அம்பயர்! 

உலகின் ஜெண்டில்மேன் கிரிக்கெட் கேப்டன் என்றால் அதில் முதலிடத்தில் தல தோனி இருப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே. தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் கடைசி வரை டென்ஷன் ஆகாமல் பொறுப்புடன் ஆடி வெற்றி தேடி தரும் கூல் கேப்டனையே நேற்றைய போட்டியில் அம்பயர் கடுப்பேற்றிவிட்டார்.

நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற 6 பந்தில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஸ்டோக் வீசிய ஒரு பந்து பேட்ஸ்மேனின் முகத்திற்கு நேராக வந்ததால் ஒரு அம்பயர் நோபால் கொடுத்தார். ஆனால் இன்னொரு அம்பயர் அது நோபல் இல்லை என்று கூறி மறுத்தார். இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த தல தோனி, உடனே களத்திற்குள் வந்து இரண்டு அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்தார். தோனி இதுபோல் அம்பயர்களிடம் ஆவேசமாக பேசி யாரும் பார்த்திருக்கவில்லை என்பதால் நேற்று அவருடைய கோபத்தை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

இந்த நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறி அம்பயருடன் தோனி வாக்குவாதம் செய்ததற்காக தோனியின் சம்பளத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.