ஹெலிகாப்டர் ஷாட் நாயகன் எம்.எஸ்.தோனியின் 10 பிரமிக்க வைக்கும் சாதனைகள்!

இந்தியக் கிரிக்கெட்டியில் பிரமிக்க வைக்கும் பல சாதனைகளை செய்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டிருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவருடைய 42 ஆவது பிறந்த நாளை அவர் கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோப்பைகளின் நாயகன் எம்.எஸ்.தோனி இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார். அந்த வகையில் இவருடைய தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 60 டெஸ்ட் போட்டியில் 27 முறை வெற்றிப்பெற்று 19 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும் 15 முறை போட்டி டிராவில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய தோனி இதுவரை 538 போட்டிகளில் பங்கேற்று 195 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளது.

அதில் 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் 17,000 ரன்களையும் விக்கெட் கீப்பிங்கில் 600 க்கும் மேற்பட்ட கேட்ச்களையும் பிடித்திருக்கிறார்.

வங்கதேசத்திற்கு எதிரான சர்வதேசப் போட்டியில் முதன் முதலாக 2014 இல் அறிமுகமான அவர் 2007 இல் இந்திய அணியின் கேப்டன் ஆனார். அந்த வகையில் 2007 – 2017 கிட்டத்தட்ட 10 வருடங்கள் இந்திய அணியின் அனைத்து வடிவப் போட்டிகளிலும் தோனிதான் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.

இதில் 2010, 2016 என இருமுறை ஆசியக் கோப்பையை வென்று இந்தியாவிற்காக பெருமை சேர்த்துள்ளார்.

2013 இல் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி இன் 3 கோப்பைகளையும் தோனி தலைமையில் இந்திய அணி பெற்றிருக்கிறது.

2008, 2009 என இருமுறை ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவருக்கு ஐசிசி பிளேயர் ஆஃப் தி இயர் விருது கிடைத்திருக்கிறது.

விளையாட்டு துறையில் இந்தியாவின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும் 2007 இல் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக எம்.எஸ்.தோனி கடந்த 2009 இல் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார்.

மேலும் கடந்த 2018 இல் பத்ம பூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.

டிசம்பர் 30, 2014 இல் மெல்போர்னில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி 3-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்தார்.

ஐசிசியின் 3 கோப்பைகளை தனது கேப்டன்சியில் வென்றுகொடுத்து அதி வேகத்தில் ஸ்டெம்பிக் செய்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அவர் ஆகஸ்ட் 2020 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவருடைய ஸ்டெம்பிக் வேகம் 0.08 வினாடிகள் என்பது பெருமை கொள்ளத்தக்கது.

சாக்ஷி சிங் ராவத்தை திருமணம் செய்துகொண்ட தோனிக்கு ஜிவா தோனி எனும் மகள் இருப்பதும் இவர்கள் தங்களுடைய பண்ணை வீட்டில் விவசாயம் செய்தபடியே வாழ்க்கை நடத்தி வருவதும் ரசிகர்கள் அறிந்ததுதான்.

தோனி பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பேட்மிட்டன் மற்றும் கால்பந்து போட்டிகளில் விளையாடி வந்தவர் என்பதும் அவர் ஒரு பைக் பிரியர் என்பதும் அந்த வகையில் பழமையாக பல பைக்குகளை சேகரித்து வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோப்பைகளின் நாயகன் எம்.எஸ்.தோனியின் இன்னும் பல அரிய அம்சங்கள் என்று சொல்ல வேண்டும் என்றால் இவர் வித்தியாசமாக ஆடும் திறனைக் கொண்டவர். எதிராளியை போட்டியில் முறியடித்து எப்படியாவது வெற்றிக் கோப்பையைத் தக்க வைத்துக்கொள்ளும் திறமைப் படைத்தவர்.

மேலும் விக்கெட் கீப்பிங்கிலும் படு அசத்தலாக செயல்படுவார். இவருடைய உடல் தகுதி பிரமிக்க வகையில் இருக்கும். ஆட்ட நேரத்தின்போது பொறுமையோடு இருப்பதுதான் இவருடைய பலமாக கருதப்படுகிறது. போட்டி கைமீறி சென்றால்கூட பொறுமையாக மனம் தளராமல் அணியை வழிநடத்தி போட்டியை வெற்றிப்பெற செய்துவிடுவார்.

கேப்டனாக இருந்தாலும் சாதாரண ஆட்டக்காரராக இருந்து அணி வீரர்களுடன் நெருக்கம் காட்டுவார். மேலும் பவுலிங் செய்வதற்கு இவர் கொடுக்கும் அறிவுரைகள்தான் போட்டியை பல நேரங்களில் வெற்றிப்பெற வைத்திருக்கிறது.

அந்த வகையில் எக்ஸ்பெர்ட் அறிவுரைக்கு பெயர்போன இவர் ஹெலிகாப்டர் ஷாட்டுக்கும் பெயர்போனவர் என்பதை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இந்திய ராணுவத்தில் இணைந்து இவர் கடந்த 2011 முதல் கௌரவ லெப்டினன்ட் கவர்னராக பணியாற்றி வருகிறார். மேலும் பாராசூட் படைப்பிரிவில் தோனி இரண்டுவார பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.