இதிலும் கீழ்த்தரமான அரசியலா? 10ஆம் வகுப்பு மாணவி கொலை குறித்து பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,May 13 2020]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக 10ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்த இரண்டு கொடூரர்கள் ஒரு முன்னணி கட்சியினர் என்பதால் அந்த கட்சி இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தும் இதுகுறித்த சர்ச்சைகள் அரசியல்வாதிகளிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்?

ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு?

முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவிப் பெண் சிறுமதுரை ஜெயஶ்ரீக்கும், மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது.

இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News

கொரோனா நோயில் உடல் பருமனாக இருப்பதும் பெரிய ஆபத்தா??? மருத்துவக் காரணம் என்ன???

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான ஆபத்துக் காரணிகளில் வயதை அடுத்து உடல் பருமனும் முக்கிய காரணம் என்று புதிய ஆய்வு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படையப்பா ஸ்டைலில் வருங்கால கணவரை கலாய்த்த தமிழ் நடிகை!

தொலைக்காட்சி மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானிசங்கர், கோலிவுட் திரையுலகில் கார்த்திக் சுப்புராஜின் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

'யூ ஆர் தி ரியல் ஹீரோ': சென்னை போலீசுக்கு பாட்டு பாடி நன்றி கூறிய 'மாஸ்டர்' நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வைரஸிடம் இருந்து பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள்,

ரூ.20 லட்சம் கோடி யார் யாருக்கு? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது, 'இந்தியாவின் பொருளாதார தேக்க நிலையை சரிசெய்ய 20 லட்சம் கோடிக்கு சிறப்பு

தளபதி விஜய்யின் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்ட நெருங்கிய நண்பர்

இந்த லாக்டவுன் நேரத்தில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.