லுங்கியை இப்படி கூட கட்டலாமா? எம்.எஸ்.பாஸ்கர் மகள் வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,June 17 2023]

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் லுங்கி கட்டிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இப்படி கூட லுங்கி கட்டலாமா என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் ஆதித்யா நடித்துள்ளார் என்பதும் ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா பாஸ்கர் சமீபத்தில் லுங்கியை வித்தியாசமான முறையில் கட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவின் கமெண்ட்ஸில் லுங்கியை எப்படி கூட கட்டலாமா? என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.