close
Choose your channels

எம்.எஸ்.பாஸ்கருக்கு சர்ப்ரைஸ் புத்தாண்டு பரிசு கொடுத்த மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

Tuesday, January 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் டப்பிங் கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடி மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து வருபவர் எம்.எஸ்.பாஸ்கர். இவருடைய மகள் ஐஸ்வர்யாவும் தற்போது டப்பிங் கலைஞராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தை அடுத்து தந்தைக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அவருடைய மகள் அளித்துள்ளார். தந்தையின் நீண்ட நாள் கனவான புல்லட்டை அவரது மகள் வாங்கி சர்ப்பரைஸாக கொடுத்துள்ளார். மகள் வாங்கி கொடுத்த இந்த பரிசை பார்த்த எம்.எஸ்.பாஸ்கர், மகளை பாசத்துடன் கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீர் விட்ட வீடியோ காட்சியை அவரது மகள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துளார்.

தந்தையும் மகளும் மாறி மாறி ஆனந்தக்கண்ணீர் விடும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தள பயனாளிகள் எம்.எஸ்.பாஸ்கரின் இனிய குடும்பத்தினர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment