close
Choose your channels

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. அழகிய புகைப்படங்கள்..!

Tuesday, August 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கர் வீட்டில் விசேஷம் நடந்துள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் ஏராளமான படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்துள்ள நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா என்ற மகனும் உள்ளனர். ஐஸ்வர்யா டப்பிங் கலைஞராக இருக்கும் நிலையில் ஆதித்யா சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா பாஸ்கர், சுதாகர் என்ற தனது பள்ளி தோழரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவர் கர்ப்பிணியாக உள்ளார்.

இதனை அடுத்து அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. எம்எஸ் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி தங்களது மகளுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் காட்சி, ஐஸ்வர்யாவின் கணவர் வயிற்றில் உள்ள குழந்தைக்கு முத்தம் கொடுக்கும் காட்சி உள்பட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து எம்எஸ் பாஸ்கர் குடும்பத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment