காதலை மறைக்க வேண்டிய சூழல் இன்று இல்லை… கருத்து கூறிய மிருணாள் தாகூரின் ஸ்டேட்டஸ் என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
சீதாராமம் திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமாகி இருக்கும் நடிகை மிருணாள் தாகூர், இன்று சினிமாவில் நடிகர், நடிகைகள் தங்களது உறவுநிலையைப் பற்றி வெளிப்படையாக பேசும் அளவிற்கு சூழல் மாறியிருக்கிறது என்று கூறியதோடு தனது தனிப்பட்ட உணர்வுநிலை குறித்த பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை மிருணாள் தாகூர், தமன்னா, நடிகர் விஜய் வர்மா என்று பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள ஆந்தலாஜி வகையிலான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் சீரிஸ் நெட்ஃபிக்ஸ் இல் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘எஸ்விசி54’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தனது லஸ்ட் ஸ்டோரி திரை அனுபவத்தைக் குறித்து நடிகை மிருணாள் தற்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் கடவுளுக்கு நன்றி, நடிகர், நடிகைகள் இன்று தங்களது உறவுநிலையை வெளிப்படையாகப் பேசுவதற்கு உரிய காலக்கட்டம் இருக்கிறது என்றும் இதுபோன்ற ஒரு சூழலில் பிறந்ததற்கு நன்றி என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் உறவுகளைப் பற்றி பேசுவதற்கு இது ஒரு நல்ல நேரம் என்று கூறிய அவர், காமம் கூட ஒரு உணர்ச்சி, அதை நான் என் படங்களில் ஆராய்ந்ததில்லை. ஆனால் நான் அசாதாரணமான ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். அது எளிமையானது. ஆனால் மிகவும் தொடர்புடையது. அதைப் பற்றி பேச நாங்கள் பயப்படுகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பால்கி சாருடன் பணிபுரிவது தூய்மையாகவும் முற்போக்குதனமாகவும் இருக்கிறது என்று பேசிய அவர் தங்கள் துணையைப் பற்றி தங்கள் காதலனைப் பற்றி மிகவும் குரல் கொடுக்கும் நபர்களால் சூழப்பட்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இன்று சினிமாவில் காதலை மறைக்க வேண்டிய தேவையேயில்லை. உறவை பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது துணையும் விரும்பினால் தாராளமாக பேசலாம். ஆனால் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பினால் நான் அதைப் பற்றி விவாதிக்க மாட்டேன்.
ஒரு காலத்தில் திருமணம் செய்துகொண்டால் சினிமாவில் வேலையே கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால் தற்போது நீனா மேம், அங்கத் பேடி, கரீனா கபூர் கான், நேஹா துபியா ஆகியோர் முன்னுதாரணமாக இருக்கின்றனர். இது இப்போது மிகவும் சாதாரணமானது. இருபதுகளில் அல்லது முப்பதுகளில் உங்களுக்கு குழந்தை இருந்தால் முற்றிலும் பரவாயில்லை என்றும் சினிமா சூழல் குறித்து பேசியுள்ளார்.
மேலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல் பல்வேறு உள்ளடக்கங்களை வழங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் நடிகை மிருணாள் தாகூர் கூறியுள்ள கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கின்றன.
இந்நிலையில் நடிகை மிருணாள் தன்னுடைய காதல் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும் காதலை வெளிப்படுத்துவது குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று ரசிகர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்ட நிலையில் இந்தக் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments