பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் 'சீதாராமம்' மிருணாள் தாக்கூர்.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 13 2023]

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் மிருணாள் தாக்கூர் என்பதும் இந்த படம் அவருக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ’கீதா கோவிந்தம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மிருணாள் தாக்கூர் தான் நாயகி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த ’வாரிசு’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த தில் ராஜு தயாரிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை நாளை ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஹீரோவாக நடிப்பது விஜய் தேவரகொண்டா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தில் சமந்தாவும் இன்னொரு படத்தில் ஸ்ரீலீலாவும் நடித்து வரும் நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.