ஐ ஆம் Desi girl… படு உற்சாகத்தோடு சீதாராமம் நடிகை பகிர்ந்த கேன்ஸ் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீதாராமம் திரைப்படம் மூலமாக ஏற்கனவே ஒட்டுமொத்த இளைஞர்களின் நெஞ்சங்களிலும் குடிபுகுந்த நடிகை மிருணாள் தாகூர் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு மேலும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பின்பு மாராத்தி திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானாவர்தான் நடிகை மிருணாள் தாகூர். இந்நிலையில் ‘லவ் சோனியா’ எனும் இந்தி சினிமாவில் நடித்த அவர் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து ‘சீதா ராமம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற சீதா என்ற கேரக்டர்தான் அவரை இந்திய அளவில் பிரபமாக்கி இருக்கிறது.
இந்நிலையில் உலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ளும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தற்போது நடிகை மிருணாள் தாகூரும் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக நான் பகல் கனவு காண்கிறேன் என்று என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் என்னைத் திட்டினர். ஆனால் உண்மையில் இது நடக்க இருக்கிறது என்று கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வது குறித்து உற்சாகத்தோடு இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் நடப்பதற்கு முன்பேயே கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட உடையை அணிந்து கேன்ஸ் தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்று இன்ஸ்டாவில் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்வமடைந்து எந்த உடையை அணியப் போகிறீர்கள் என்று கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஃபால்குனி மற்றும் ஷேன் பீக்காக் வடிவமைப்பில் உருவான ஆடையை அணிந்து நடிகை மிருணாள் தாகூர் நேற்றிரவு ரெட் கார்பெட்டில் கலந்து கொண்டுள்ளார். மேலும் என்னை டேசி கேர்ளாக உணர வைத்தற்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூரின் கேன்ஸ் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே பாராட்டை குவித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com