நான் சின்னம்மா பேசுகிறேன்… செம ஷாக் கொடுத்த சசிகலா! அரசியலுக்கு மீண்டும் எண்ட்ரியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட திருமதி சசிகலா திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்து அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் பங்கு வெறுமையாக இருந்தது.
அதோடு அதிமுகவை விட்டும் இவர் அந்நியமாகிப் போனார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் இபிஎஸ் எனும் ஆளுமையே பெரிதாக மதிக்கப்பட்டார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வராக இருந்த ஒபிஎஸ் இந்தத் தேர்தலைப் பொறுத்த வரைக்கும் ஒரு துணை கதாபாத்திரமாகவே செயல்பட்டார்.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் திமுக வெற்றிப்பெற்று தற்போது ஆட்சி அமைத்து இருக்கிறது. ஆனால் அதிமுகவில் தேர்தலுக்கு முன்பு இருந்த குழப்பத்தை விட தேர்தலுக்குப் பின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற குழப்பம் பெரிய அளவிற்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சிக்கலுக்கு ஒருவழியாக தற்போது விடை கிடைத்துவிட்டாலும் ஒபிஎஸ், இபிஎஸ் எனும் இருபெரு துருவத்தையே இது ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இபிஎஸ் திமுக ஏற்பாடு செய்யும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓபிஎஸ், கொரோனா விஷயத்தில் திமுக சிறப்பாக செயல்படுகிறது எனக்கூறி தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார். இதனால் அதிமுகவில் இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இருபெரும் ஆளுமைகளும் பிரிந்து கிடப்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த திருமதி சசிகலா நேற்று திடீரென ஒரு தொண்டருடன் நேரடியாக தொலைபேசியில் பேசி படு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த உரையாடலில் அவர் தெரிவித்த சில கருத்துக்கள்தான் தற்போது சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் அந்த மாவட்டத்தின் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரை திருமதி சசிகலா அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில், “ஒன்றும் கவலைப்படாதீங்க… கட்சியைக் கண்டிப்பா சரி பண்ணிடலாம், கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கொரோனா குறைந்த பிறகு எல்லோரையும் சந்திக்கிறேன்” என திருமதி சசிகலா பேசுகிறார். இதைத் தொடர்ந்து சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா? ஒருவேளை அவர் வந்தால் அதிமுகவிற்குள் இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்படுமா? என்பது போன்ற கேள்விகளை அனைவரும் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலாவை தொடர்ந்து எதிர்த்து வரும் அதிமுகவின் முக்கிய ஆளுமையான கே.பி.முனுசாமி அவர்கள் “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்கமாட்டார். அதிமுகவை திசை திருப்பி தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது ஒரு தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலா தான் அவர்களிடம் பேசி வருகிறார்” என்று கூறியுள்ளார்.
இதனால் சசிகலா மீண்டும் கட்சிக்குள் வருவாரா? அல்லது அதிமுகவையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com