அவரிடம் உள்ள ஒரே குறை இதுதான்: சந்தோஷ் நாராயணனின் காதல் மனைவி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பொதுவாக வேலை செய்யும் இடத்தில் அமைதியாக இருப்பாராம். பாடல்கள் கம்போஸ் செய்யும்போதும் ரிகாடிங் செய்யும்போது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவராக இருப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஆனால் வீட்டில் எப்படி? அவருடைய காதல் மனைவி கூறுவதை கேளுங்கள்
வீட்டில் அவர் படுசேட்டையாகவும் ஜாலியாகவும் இருப்பார். எப்பவும் அவரை சுற்றி இருபது, முப்பது பேர் இருப்பார்கள். ஆனாலும் அவர் தான் பேசிக்கொண்டே இருப்பார்.
என்னை உள்பட தன்னை சுற்றி உள்ளவர்களை அன்புடன் பார்த்து கொள்வதில் அக்கறை காட்டுவார். குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் கவனித்து கொள்ளும் அவர், தன்னை பற்றி கவலைப்படுவதே இல்லை. தன்னை கவனித்து கொள்வதில் அவர் ஜீரோ. அந்த ஒரே ஒரு குறைதான் அவரிடம் உள்ளது. அதற்காகவே நான் அவரை விட்டு விலகாமல் அவருக்கு தேவையானதை கவனித்து வருகிறேன்.
அதேபோல் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை அவரைபோல் யாரிடமும் இருக்காது. அதேபோல் ரிகார்டிங் சென்றாலும் முதலில் அறையை சுத்தம் செய்துவிட்டு தான் பணியை தொடங்குவார் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments