'தல தோனிக்கு வாழ்த்து கூறிய Mr.லோக்கல் டீம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று தல தோனியின் சிங்கப்படையான சிஎஸ்கே அணிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணிக்கு பிளே ஆஃப் 2 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவிருக்கின்றது. இன்றைய போட்டியில் வென்று, மும்பை அணியை இறுதி போட்டியில் பழிவாங்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படக்குழுவினர் சற்றுமுன் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் Mr.லோக்கல் திரைப்படத்தின் டிரைலரில் தோனி குறித்த ஒரு வசனம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 'மழை பெஞ்ச டெஸ்ட் மேட்ச் மாதிரி என் வாழ்க்கை நசநசன்னு இருந்துச்சு. ஆனா நீ வந்ததுக்கு அப்புறம் தான் நின்னு தோனி விளையாடிற டி20 மேட்ச் மாதிரி சும்மா பரபர பரபரன்னு போகுது' என்று சிவகார்த்திகேயன் பேசிய வசனம் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
??#MrLocal team wishes our men in Yellow to qualify for Finals tonight. Whistle Podu @ChennaiIPL !! #cSK#MrLocalWishesCSK #CSKvsDC#MrLocalOnMay17@rajeshmdirector @Siva_Kartikeyan #Nayanthara
— Studio Green (@StudioGreen2) May 10, 2019
@actorsathish @iYogiBabu@kegvraja @SF2_official @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/tCAuxpheco
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments