4 கோடி பரிசுத்தொகை… வாழ்வா? சாவா? ரியல் Squid game நடத்திய யூடியூபர்!
- IndiaGlitz, [Saturday,November 27 2021]
சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான “ஸ்க்விட் கேம்“ தொடர் உலகம் முழுவதும் பலதரப்பட்ட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. முதலாளித்துவக் கருத்தை மையமிட்டு எடுக்கப்பட்ட இந்தத் தொடர் பார்ப்பதற்கு உயிருக்குப் போராடும் ஒரு விளையாட்டு தொடராகத்தான் தெரியும். அந்த அளவிற்கு வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தைக் கொண்டிருக்கும் இந்த சீரிஸ் தொடரை உண்மையில் ஒரு யூடியூபர் நடத்தியிருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூடிபரான Mr Beast, Squid game- ஐ உண்மையில் நடத்திப் பார்த்தால் என்ன என்று முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக 3.5 லட்சம் டாலர் செலவில் Squid game களத்தை தயார் செய்திருக்கிறார். மேலும் உண்மையான தொடரில் வருவது போன்றே உலகம் முழுவதும் உள்ள 456 விளையாட்டு வீரர்களை இதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்த விளையாட்டில் வெற்றிப்பெறும் வீரருக்கு 456,000 டாலர் பரிசுத்தொகையும் அறிவித்து இருக்கிறார். இந்தத் தொகை இந்திய மதிப்பில் ரூ.3.4 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தனை செலவு செய்து ஒரு மாதிரி விளையாட்டு தொடரை நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். ஆனால் Mr Beast aka Jimmy Donaldson எனும் யூடியூபருக்கு இரு பயரங்கமான ஒரு த்ரில்லை கொடுத்திருக்கிறது. எனவே உண்மையான Squid game- விளையாட்டிற்கு ஏற்பாடு செய்த அவர் Squid game- இல் வருவது போன்றே 1.Red light green light 2. தேன்கூடு சவால் 3. மார்பிள்ஸ் கேம் 4. கயிறு இழுக்கும் கேம் 5. கண்ணாடி துள்ளல் சவால் என அனைத்துப் போட்டிகளையும் நடத்தியிருக்கிறார்.
கடைசியில் Squid game-தொடரில் வரும் சுட்டுக் கொல்லப்படும் போட்டிக்குப் பதிலாக Musical chair கேம் வைத்து சமாளித்து இருக்கிறார். Mr Beast நடத்திய இந்த விளையாட்டுத் தொடரில் இளைஞர்கள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டுள்ளனர். இதேபோன்று சமீபத்தில் அபுதாயில் உள்ள தென்கொரிய கலாச்சாரம் மையம் Squid game-ஐ போன்று ஒரு மாதிரி விளையாட்டு தொடரை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு சீரிஸ் தொடரில் வரும் விளையாட்டை உண்மையில் நடத்தி பார்த்திருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.