'சன்' நிறுவனத்துடன் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 16வது படமான 'எஸ்கே 16' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கவுள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் மற்றும் வியாபாரம் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் தற்போது அவரது இன்னொரு படத்தின் சாட்டிலைட் உரிமைத்தையும் அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We are extremely delighted to share that @SunTV ?? has acquired the Satellite rights for #MrLocal?? We are sure this will lead #SunTV to rule the future TRP ratings ?? @Siva_Kartikeyan #Nayanthara @rajeshmdirector @hiphoptamizha @SF2_official @thinkmusicindia @DoneChannel1 pic.twitter.com/sBHfKW4HNs
— Studio Green (@StudioGreen2) May 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com