பணி முடிந்துவிட்டது: 'மிஸ்டர் லோக்கலை' ஒப்படைத்த இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் பணிகளை கடைசி நேரம் வரை பார்த்து கொண்டிருந்த இயக்குனர் ராஜேஷ் எம், சற்றுமுன் முழு பணிகளையும் முடித்து படத்தை தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.
மிஸ்டர் லோக்கல் படத்தை டெலிவரி செய்துவிட்டேன். என்னால் முடிந்தவரை அதிகபட்சமாக பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இந்த படத்தை கொடுத்துள்ளேன். வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படம் கோடை விடுமுறையில் பார்த்து ரசிக்க ஒரு நல்ல படம் என கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Mrlocal - Content delivered,job done,Tried my level best to entertainment you all this summer from MAY 17....#MRLocalfromMay17 ?????????????????????? pic.twitter.com/FfcYUvB9mm
— Rajesh M (@rajeshmdirector) May 15, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments