பணி முடிந்துவிட்டது: 'மிஸ்டர் லோக்கலை' ஒப்படைத்த இயக்குனர்!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பணிகளை கடைசி நேரம் வரை பார்த்து கொண்டிருந்த இயக்குனர் ராஜேஷ் எம், சற்றுமுன் முழு பணிகளையும் முடித்து படத்தை தயாரிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.

மிஸ்டர் லோக்கல் படத்தை டெலிவரி செய்துவிட்டேன். என்னால் முடிந்தவரை அதிகபட்சமாக பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்து இந்த படத்தை கொடுத்துள்ளேன். வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படம் கோடை விடுமுறையில் பார்த்து ரசிக்க ஒரு நல்ல படம் என கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

More News

நயன்தாரா பட ரீமேக்கில் தமன்னா! ஒரே நாளில் இரு படங்களும் ரிலீஸ்?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகள் மற்றும் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

சாமியாராக மாறிவிட்ட பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்!

தமிழ்த்திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஓமக்குச்சி நரசிம்மன். 1946ஆம் ஆண்டு 'ஒளவையார்' என்ற படத்தில் அறிமுகமாகி

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது எப்.ஐ.ஆர் பதிவு: கைது செய்யப்படுவாரா?

இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசிய பேச்சு நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரவக்குறிச்சியில் இன்று கமல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

'இந்தியன் 2' படத்திற்காக ஷங்கர் செய்த புதிய முயற்சி!

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' திரைப்படம் முதலில் லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து குதித்த ஜிஎஸ்டி கண்காணிப்பாளர்!

மும்பை பங்குச்சந்தை கட்டிடத்தின் 30வது மாடியில் இருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பாளர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது