சிவகார்த்திகேயன், நயன்தாரா படத்திற்கு தரலோக்கல் டைட்டில்?

  • IndiaGlitz, [Tuesday,January 29 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'எஸ்கே 13' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் வைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'மிஸ்டர் லோக்கல்' என்ற தர லோக்கல் டைட்டில் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More News

சமந்தாவுக்காக மாற்றம் செய்யப்பட்டதா? 96 தெலுங்கு ரீமேக் குறித்து இயக்குனர்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான '96' தற்போது தெலுங்கில் உருவாகவுள்ளது. ராம், ஜானு கேரக்டர்களில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர்

8 மாதங்களில் ரூ.1000 கோடி பிசினஸ்: சூப்பர் ஸ்டாரின் வசூல் வேட்டை

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்து வரும் ரஜினிகாந்த், இந்த வயதிலும் மெகா ஸ்டார்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெற்றிப்படங்களில்

தளபதி 63: ரிஸ்க்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பில் விஜய்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

'பேட்ட', 'விஸ்வாசம்' புயலிலும் சாதனை செய்யும் 'சர்கார்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்து, உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது.

தமிழ்ப்படத்திற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், அந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது