Mr.சந்திரமெளலி ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் மூன்று பிரபலங்கள்

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

முதல்முறையாக கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் Mr.சந்திரமெளலி படத்தை பிரபல இயக்குனர் திரு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் மூன்று வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை மூன்று பிரபலங்கள் வெளியிடவுள்ளனர். விஷால், ஆரியா மற்றும் குஷ்பு ஆகிய மூவரும் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் மூன்று போஸ்டர்களை வெளியிடவுள்ளனர்.

கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, மகேந்திரன், அகத்தியன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையும், ரிச்சர்டு நாதம் ஒளிப்பதிவும் செய்து வருகின்றனர்.

 

More News

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ப.சிதமரம் வீட்டில் இன்று காலை முதல் வருமான அமலாக்கத்துறை அதிகாரிகL சோதனை செய்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு

தந்தை பெரியார் விருதை முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு வழங்கப்படுகிறது.

இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

உலக தமிழர்கள் அனைவரும் நாளை பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது.

முடிவுக்கு வந்தது அஞ்சலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

அஞ்சலி நடித்த் 'பலூன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.