close
Choose your channels

Mr. சந்திரமெளலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, June 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள Mr. சந்திரமெளலி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருசில ரிலீஸ் தேதிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், உள்பட பலர் நடித்துள்ளனர். விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment