Mr.சந்திரமெளலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 31 2018]

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள 'Mr.சந்திரமெளலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் திரு அறிவித்துள்ளார்.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக இயக்குனர் திரு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

More News

மற்ற ஜல்லிக்கட்டு படங்களில் இருந்து 'மதுரவீரன்' வேறுபடுவது ஏன்? சண்முகப்பாண்டியன்

கேப்டன் விஜயகாந்த் மகன் நடிப்பில் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவான 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

பாலா-துருவ் படத்தில் இணைந்த தேசியவிருது பட இயக்குனர்

சீயான் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் படமான 'வர்மா' என்ற படத்தை தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

தளபதி சந்திப்புக்கு பின் பார்த்திபன் எழுதிய கவிதை

பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதை அடுத்து அவர் கமல், ரஜினி உள்பட பிரபலங்களை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார்

விஜய் ஆண்டனியின் 'காளி' படம் குறித்த முக்கிய அப்டேட்

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வந்த 'காளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கமல்-ரஜினி யாருக்கு ஆதரவு: பாரதிராஜா பேட்டி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்து, 'நாளை நமதே' என்ற அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.