Mr.சந்திரமெளலி ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,July 09 2018]

கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் திரு இயக்கிய 'Mr.சந்திரமெளலி திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த படம் சென்னையில் 20 திரையரங்குகளில் 239 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.93,04,112 வசூல் செய்து சராசரி வசூல் பட பட்டியலில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு முதல்வாரயிறுதி நாட்களில் 85% பார்வையாளர்கள் திரையரங்குகளில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கார்த்திக் நடிப்பு மற்றும் ஒருசில திருப்புமுனை காட்சிகள் பாசிட்டிவ் ஆக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தின் மற்ற நகரங்களின் வசூல் குறித்த தகவல்களை இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம்.